வீட்டில் உறங்கி கொண்டிருந்தவர் திடீர் மரணம்!! நாமக்கல் அருகே பரபரப்பு!! - Seithipunal
Seithipunal


வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள லத்துவாடி கிராமம் சிலம்பாகவுண்டம்பாளைத்தை சேர்ந்தவர் பூசன்(65). இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி இருந்து விட்டதால், 2-வது திருமணம் செய்தார். ஆனால் 2-வது மனைவியும் இவருடன் சேர்ந்து வாழவில்லை. இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் பூசன் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் மன உளைச்சலுக்கு உள்ளான பூசன் நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம்போல் வீட்டுக்கு வெளியே தனியாக படுத்து தூங்கினார். தினமும் காலையிலே வேலைக்கு சென்று விடுவார். ஆனால் நேற்று காலை 10 மணிக்கு மேல் ஆகியும் எழுந்திருக்கவில்லை, என்பதால் சந்தேகம் அடைந்த அவரது பக்கத்துக்கு வீட்டார்கள், அவருக்கு அருகில் சென்று பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். 

அவரது தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயத்துடன் இறந்து கிடந்தார். மேலும் அவரது வாய் மற்றும் கால்களும் கட்டப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கம் வீட்டார்கள் அருகில் இருந்த வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அத்தகவளின் பேரில் சம்பவம் இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது விசாரணையின் போது பூசன் வீட்டில் இருந்த, அவரது மொபட், டி.வி. மற்றும் செல்போன் ஆகியவை திருட்டு போய் இருந்தது என தெரியவந்தது. இதனால் அவரது வீட்டிற்கு திருடன் வந்ததாக தெரியவந்தது. திருடும் போது அவர் சத்தம் போடாமல் இருக்க, அவரது வாயை துணியால் கட்டி இருக்கலாம். பின் ஆத்திரத்தில் பூசனை அடித்து கொலை செய்து விட்டு உடலை கட்டிப்போட்டு விட்டு சென்று இருக்கலாம் என்று தெரியவருகிறது.

இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூசனை கொலை செய்த மர்ம நபர் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murdered in near by namakkal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->