136 டூ 152... அணை தொடர்பில் முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - மகிழ்ச்சியில் விவசாயிகள்..! - Seithipunal
Seithipunal


முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்தார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், தி.மு.க. 15 ஆண்டு காலம் மத்தியில் அமைச்சரவையில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. மக்கள் நலனில் எந்தவொரு அக்கறையும் செலுத்தாத தி.மு.க. தங்கள் குடும்ப நலனில் மட்டும் தான் அக்கறை செலுத்தி வந்தது.

எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அ.இ.அ.தி.மு.க.வை அசைக்க முடியாது. தி.மு.க. எப்போதும் பொய்யான தேர்தல் அறிக்கையைத் தான் கொடுப்பார்கள். இவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறினார்கள்.

யாருக்காவது 2 ஏக்கர் நிலம் கொடுத்திருப்பார்களா? ஆனால் அப்பாவி மக்களின் நிலங்களை அபரித்தார்கள். அம்மா அவர்கள் காவல்துறையில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவை தொடங்கி அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலங்களை மீட்டுக் கொடுத்தார்.

மேலும் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக அம்மா உயர்த்திக் காட்டினார். நாங்கள் 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுப்போம்.  மதுரையை குடிசைகளே இல்லாத நகரமாக உருவாக்கித் தருவோம்' என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mullai periyar dam height increase


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->