மீன் பிடிக்கலாமா?... ரம்மியமான இடம்... முக்கொம்பு..! - Seithipunal
Seithipunal


திருச்சியில் இருந்து ஏறத்தாழ 22கி.மீ தொலைவிலும், நாமக்கலில் இருந்து ஏறத்தாழ 67கி.மீ தொலைவிலும், சமயபுரத்தில் இருந்து ஏறத்தாழ 23கி.மீ தொலைவிலும் அமைந்து அனைவரையும் கவரும் ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது.

முக்கொம்பு அணை காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் மேல் கட்டப்பட்டதாகும். 

மாநகரான திருச்சிக்கு நெருக்கமாக அமைந்துள்ள பிரபலமான சுற்றுலாத்தலமாக இது உள்ளது. 

இங்கு கேளிக்கை பூங்கா, சிறுவர் பூங்கா, மீன்பிடித்தல் மற்றும் ஒரு சில விளையாட்டுகள் என பல இடங்கள் உள்ளன.

இதன் விளைவாக இந்த இடமானது மிகப்பிரபலமான சுற்றுலாத்தலமாகவும், வார இறுதியில் நேரத்தை செலவிடுவதற்கு ஏற்ற நுழைவாயிலாகவும் திகழ்கிறது.

ரம்மியமான இடம். குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் மகிழ்ச்சிகரமாக பொழுதுபோக்கக்கூடிய இடம். 

திருச்சிக்கு சுற்றிப்பார்க்க செல்லும் மக்கள் முக்கொம்பை சுற்றிப்பார்க்காமல் செல்ல மாட்டார்கள். 

இந்த இடத்தை தமிழ்நாடு சுற்றுலாத்தலம் சிறந்த சுற்றுலாத்தலமாக அறிவித்துள்ளது. காவிரி, கொள்ளிட ஆற்றுப் பாலத்தைச் சுற்றித் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுவது அவ்வளவு அழகாக இருக்கும்.

காவிரி, கொள்ளிடம் என இரு ஆறுகளுக்கு இடையேதான் பொதுப் பூங்காவும், சிறுவர் பூங்காவும் உள்ளன.

 குழந்தைகள் குதூகலமாக விளையாடி மகிழ, தொங்கும் ஊஞ்சல், சறுக்கு ஊஞ்சல், குட்டி ராட்டினம், சீசா என பல வகைகள் உள்ளன. 

குழந்தைகளுக்கு என குட்டி நீச்சல் குளமும் இங்கே உள்ளது. ஒவ்வொன்றிலும் குழந்தைகள் விளையாட ஆரம்பித்தால், அங்கிருந்து வரவே மாட்டார்கள். 

அந்த அளவுக்குக் குழந்தைகள் பொழுதைக் கழிக்க ஏற்ற இடம். காலை முதல் மாலை வரை இங்கு குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியாக இருந்து வர ஏற்ற இடமாக இது இருக்கும் என்பதில் ஐயமில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mukkombu upper dam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->