'உன் பொண்ணா இருந்தா அனுப்புவியா'? என கேட்ட தோழர்களுக்கு 'திமுக' எம்பி அளித்த 'நறுக்' பதில்!! - Seithipunal
Seithipunal


ரோடு மாவட்டம், பவானி அருகே கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்த செல்வன் (25) இளமதியும் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தாகவும் இதில் செல்வன் பட்டியல் இனம் சமூகத்தைச் சேர்ந்தவர், இளமதி பிறபடுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்களுடைய காதலுக்கு பெண்ணின் பெற்றோர்கள், உறவினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதனால், காதலன் செல்வனுடன் சேர்ந்து இளமதியின் பெற்றோருக்கு தெரியாமல் திராவிடர் விடுதலைக் கழக தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் என்ற பெயரில் கடந்த திங்கள்கிழமை (மார்ச் 9) அவசரமாக திருமணத்தை செய்து வைத்தனர். இதனையறிந்த, பெண்ணின் உறவினர்கள் 40க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை இரவு திவிக நிர்வாகி காவை ஈஸ்வரன் வீட்டில் தங்கவைக்கப்ட்டு இருந்த இளமதியை மீட்டனர்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் திவிகவினர் இடையே பரவியதால் சேலம் மாவட்டம், கொளத்தூர் காவல் நிலையத்தில் குவிந்தனர். காவை ஈஸ்வரன் மற்றும் மணமக்களை உடனடியாக மீ்ட்க வேண்டும், கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டுமென கொளத்தூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இளம் பெண்ணை கடத்தி அவர்களின் பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருட்டு திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, இளமதி கடத்தப்பட்டதாக திராவிடர் விடுதலைக் கழகதினர் கூறிவந்த நிலையில், இளமதி இன்று மேட்டூர் காவல் நிலையத்தில் தனது வழக்கறிருடன் ஆஜராகி பெற்றோருடன் செல்லவே விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டது. பின்னர், , காதல் திருமணம் செய்யவதற்கு தனது மகளை கடத்திய காரணத்திற்காக பவானி காவல் நிலையத்தில் திவிக தலைவர் கொளத்தூர் மணி, செல்வன் உட்பட 4 பேர் மீது இளமதியின் பெற்றோர் சார்பில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக எம்பி செந்தில்குமார் அவரது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டபடுகிறது., சமூக நீதி மறுக்கபடுகிறது. தற்காலிக வெற்றி என நம்பும் கோழைகளிடம் கேட்கிறேன். தைரியம் இருந்தால் இளமதியை தனியாக பிரஸ்மீட் அனுப்புங்க. அப்போ உங்க முகத்திரை கிழிந்து, சாயம் வெளுக்கும் அதை கண்ணாடியில் பார்த்து ரசித்து சிரித்து கொள்ளுங்கள்" என்ற குறிப்பிட்டிருந்தார்.

இவரது இந்த பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து கண்டபடி திட்டி பதிவிட்டு வந்தார்கள். மேலும், தகாத வார்த்தைகளை சொல்லி வசைபாடினார்கள். அதில், உன் பெண்ணாக இருந்த இப்படி பேசுவியா? உன் மகளை அனுப்பி வைப்பியா? என்று அவரை குறிப்பிட்டு பதிவிட்டு வந்தார்கள்.

இந்த நிலையில், அவரிடம் ஏசியவர்களுக்கு பதில் அளிக்கும் விதத்தில், தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் " உன் பொண்ணு இப்படி கட்டி குடுபியா என்று கேட்கும் தோழர்களுக்கு-நான் யாரு Sir குடுபதற்க்கு,அவர்கள் உரிமையில் தலயிடுவதற்கு.. மீண்டும் ஒரு முறை உரக்க சொல்றேன் என் குழந்தைக்கு 6வயது யாருடன் வாழ வேண்டும் என்று முடிவு எடுக்கும் உரிமை அவருடையது
நீங்கள் குறிப்பிடும் எல்லோரும் மனிதர்கள் தான்" என்று பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mp senthilkumar mp reply in twitter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->