தனது மகனை காப்பாற்ற சென்று தாய்க்கு நேர்ந்த விபரீதம்! கண்முன்னே நேர்ந்த கொடூரத்தால் கதறும் குடும்பத்தார்கள்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் வசித்து வந்தவர் சேர்ந்தவர் பலராமன். இவருடைய மனைவி காசியம்மாள். பலராமன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு இறுதி காரியங்கள் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் பலராமனின் காரியத்திற்கு உறவினர்கள் பலரும் கலந்துகொள்ளவில்லை.இதனால் ஆத்திரமடைந்த பலராமனின் இளையமகன் ரவி, நேற்று மது அருந்திவிட்டு அவரது உறவினர்களை ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்துள்ளார்.

அதனை நீண்ட நேரமாக கவனித்து கொண்டிருந்த ரவியின் அண்ணன் பெருமாளின் மகன் அறிவரசன் கோபமடைந்து , ஏன் இப்படி எல்லோரையும் திட்டிக்கொண்டிருக்கிறாய், கத்தாமல் சும்மா இரு என கூறியுள்ளார்.

இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்களது வாக்குவாதம் முற்றவே கைகலப்பானது. இதனால்  ஆத்திரமடைந்த அறிவரசன் திடீரென அரிவாளை எடுத்து வந்து  ரவியை வெட்டியுள்ளான்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரவியின் தாய் காசியம்மாள் தனது மகனை வெட்டுவதை கண்டு  அதிர்ச்சியடைந்து அவரை  காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அறிவரசன் இடையில் வந்த அவரையும் சரமாரியாக வெட்ட ஆரம்பித்துள்ளான். இதில் பலத்த காயமடைந்த காசியம்மாள் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.மேலும் அறிவரசன் தப்பியோடியுள்ளார்.

மேலும் வெட்டுப்பட்ட ரவியை அக்கபக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதற்கிடையில் சம்பவம் அக்குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காசியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர்  இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் , தப்பியோடிய அறிவரசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.


 

English Summary

mother dead when try to saving her son


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal