மகன்களை தீயிட்டு கொளுத்தி தாய் செய்த அதிர்ச்சி செயல்.! அவசர முடிவால் அடுத்தடுத்து நேர்ந்த சோகம்!! - Seithipunal
Seithipunal


திருச்சியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்.இவர் கூலித்தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவி நாகராணி. இவரும் வேலைக்கு சென்றுவருகிறார். இந்த தம்பதியினருக்கு குணா என்ற 10 வயது மகனும், சந்தோஷ் என்ற 7 வயது மகனும் உள்ளனர்.

இந்நிலையில் நாகராணி வேலைக்கு செல்வது பன்னீர் செல்வத்திற்கு பிடிக்கவில்லை. வேலைக்கு செல்லவேண்டாம் நின்றுவிடுமாறு பன்னீர் செல்வம் தன்னுடைய மனைவி நாகராணியிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இதனால் மனமுடைந்த நாகராணி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து தனது மகன்கள் குணா, சந்தோஷ் மீதும், தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார்.

தொடர்புடைய படம்

தீ பற்றிக்கொள்ளவே எரிச்சல் தாங்கமுடியாமல் அவர்கள் கதறி அலறியுள்ளனர். இந்நிலையில் வீட்டின் உள்ளேயிருந்து அலறல் சத்தம் வருவதை கபதறிப்போன  அக்கம்பக்கத்தினர்வீட்டிற்குள் விரைந்துள்ளனர்.

அங்கு  மூன்று பேரும் உடலில் தீ வைத்துக்கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் தீயை அணைத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு  மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

 பலத்த தீ காயங்களுடன் தீவிர சிகிச்சை  பெற்றுவந்த நாகராணி,  குணா, சந்தோஷ் மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து  உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English Summary

mother and son commits fire suicide


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal