பெண்களுக்கு எதிரான அராஜக கட்சி திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் - பிரதமர் மோடி கொந்தளித்து பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக - பாமக - பாஜக - த.மா.க உட்பட பல கட்சிகள் இணைத்து தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கூட்டணிக்கட்சி தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டணி வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சார கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, " நாங்கள் வளர்ச்சிக்கான திட்டங்களை அறிவித்துள்ளோம். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் குடும்பத்திற்கான அறிவிப்பு மற்றும் பிறரை அவமதிப்பது போன்ற திட்டங்கள் உள்ளது. காங்கிரஸ் மற்றும் திமுக 2 ஜி ஏவுகணையை தாக்குகிறது. தமிழக பெண்களை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு திமுக - காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. 

தமிழக பெண்கள் சக்தியை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு திமுக - காங்கிரஸ் கூட்டணி செயல்பட்டு வருகிறது. திமுக, காங்கிரஸ் தலைவர்கள் உங்களின் கட்சியினரை கவனிக்க வேண்டும். பெண்களை இழிவுபடுத்தினால் நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டோம். தமிழகத்தில் இவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் இன்னும் என்னென்ன கொடுமைகள் நடக்கும் என்று நினைத்துப்பாருங்கள். 

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியின் கலாச்சாரமே பெண்களை அவமானப்படுத்துவதுதான். திமுக திண்டுக்கல் லியோனி பெண்கள் குறித்து அவதூறாக பேசினார். திமுக இதனை கண்டிக்கவில்லை. உதயநிதியும் இதுபோன்று பேசியுள்ளார். கடந்த 1989 மார்ச் மாதம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களை சட்டப்பேரவையில் திமுகவினர் எப்படி அவமானப்படுத்தினார்கள் என்பதை மறக்க வேண்டாம். 

திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் அராஜகத்தை வழியிலேயே இருந்து வருகிறார்கள். இது தமிழகத்தில் மட்டுமல்ல., திமுகவின் நட்பு கட்சி ஆட்சி நடைபெற்று வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் அதேபோலத்தான். மூதாட்டியை கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளார்கள். பெண்களுக்கு எதிரான பாதைகளில் திமுக - காங்கிரஸ் கூட்டணியமைத்து செயல்பட்டு வருகிறது " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi Talks about DMK Congress Supporters Against Woman 30 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->