"தாழ்த்தப்பட்டவர்களுக்கு, அதிகாரம்.?" வைரலாகும் மோடியின் லேட்டஸ்ட் ட்வீட்.! - Seithipunal
Seithipunal


இன்று மாநிலங்களவையில் முக்கியமான சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மிக முக்கியமானது மக்களவையில் எஸ்சி எஸ்டி மற்றும் ஆங்கிலோ இண்டியன் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான திருத்த மசோதா மற்றும் ஆயுத திருத்த மசோதா. 

இந்த இரண்டு மசோதாக்களும் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் தற்பொழுது உள்ள எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இன்னும் பத்து வருடங்களுக்கு அப்படியே தொடரும் என மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேசமயம் ஆங்கிலோ இந்தியன் சமூகத்திற்கு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு வந்த இரண்டு உறுப்பினர்கள் இனி இருக்கமாட்டார்கள் என மசோதாவில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏனெனில் அவர்கள் இந்தியாவில் 296 நபர்கள் மட்டுமே வசிப்பதால் அவர்களுக்கு தனியாக பிரிதிநிதிகள் வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறிய அதேவேளையில் ஆயுத திருத்த மசோதாவும் மாநிலங்களவையில் நிறைவேறியது. 

லோக்சபாவில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேறியதற்கு பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரத்தினை அளிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் எனவும் பிரதமர் மோடி அதில் கூறியுள்ளார். 

அதற்கான ட்வீட்டர் பதிவு: 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi latest tweet about 126th Amendment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->