பதவியேற்றபின் மோடி முதல் முறை தமிழக வருகை.!! எதற்காக தெரியுமா.?.!!  - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் தேர்தலில் பாஜக 342 அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 282 தொகுதிகளில் வெற்றிபெற்ற பாஜக கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது 

மக்களவை தேர்தலில் 1984க்கு பிறகு தொடர்ந்து இரண்டு முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் கட்சி என்ற பெருமையையும் பாஜக இந்த தேர்தலில் பெற்றுள்ளது. இந்நிலையில், மத்தியில் ஆட்சியமைக்க வரும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார். 

குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று பின்னர் மோடி பல மாநிலங்களில் இருந்து வந்த முக்கிய அரசியல்வாதிகளின் முன்னிலையில் பதவியேற்றார். 

இதனை தொடர்ந்து, இம்மாதம் 3வது வாரம் சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சென்னை வருகிறார். விழாவில் கலந்துகொண்டு பட்டங்களை வழங்க உள்ளார். பிரதமராக 2-வது முறையாக பதவியேற்ற பின் பிரதமர் மோடி முதல் முறையாக தமிழகம் வருவது குறிப்பிடத்தக்கது. 

Tamil online news

Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi come to tamilnadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->