என் வீட்டில் நடந்த சோதனைக்கு இதுதான் காரணம்.. செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


நேற்று காலை கரூர் டிஎஸ்பி தலைமையில் 15 பேர் கொண்ட போலீசார் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் வீடு, சென்னையில் உள்ள வீடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.  

2011-2015 ஆம் ஆண்டில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்த போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக 16 பேரிடம் சுமார் 95 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. 

இதையடுத்து, அம்பத்தூர் கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அந்த  புகாரின் அடிப்படையில் தான் நேற்று சோதனை நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சோதனையை அடுத்து செந்தில்பாலாஜியின் வீட்டிற்கு போலீசார் சீல் வைத்தனர். 

நேற்று நடத்தப்பட்ட சோதனையில் தங்க நகைகள், வாகனங்கள் மற்றும் கார் போன்றவற்றின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சொத்து தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வங்கி கணக்குகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் வங்கி கணக்குகளின் லாக்கர் சாவி, பென் டிரைவ், மடிக்கணினி மற்றும் மெமரி கார்டு போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இது தொடர்பாக செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்த சமயத்தில், தற்போது நடைபெற்ற சோதனைக்கும் எனக்கும் என் தம்பிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. இது குறித்த உண்மையை கடந்த 2017 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தீர்ப்பாகி உத்தர பெற்றுள்ளோம். 

எனது முடிந்துபோன வழக்கை மீண்டும் தோண்டி எடுத்து வருகின்றனர். இதற்காக என்னிடம் ஏதேனும் ஆதாரங்கள் இருக்குமா? என்பது தொடர்பாக தேடி வருகின்றனர். மேலும், சென்னையில் இருக்கும் எனது இல்லம் பூட்டி உள்ளது. கரூரில் இருக்கும் ஜவுளி நிறுவனம் பூட்டி உள்ளது. 

கரூரில் இருக்கும் எனது வீட்டிற்கு வந்த காவல்துறையினர் நான் இல்லாததை அறிந்து எனது தாயார் மற்றும் தந்தையரை தொந்தரவு செய்துள்ளனர். வீட்டிலும் சோதனை நடத்தி வந்துள்ளனர். 

இது முழுக்க முழுக்க முற்றிலும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக அரசும், அரசு இயந்திரமும் முழு வேகத்துடன் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MLA senthil balaji speech about income tax rid


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->