ரத்துசெய்து அறிவிப்பை வெளியிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் 117 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 2 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 784 பேருக்கு ஒரு நாள் வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 1975 பேர் கண்காணிப்பில் இருக்கின்றனர். 88 பேர் ரத்த மாதிரியில் கொரோனா வைரஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

16 மாவட்ட எல்லை வழியாக நுழையும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மார்ச் மாதம் முடியும் வரை வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்கள் செல்லும் பயணங்கள் ரத்து செய்து கொரோனா இல்லாத தமிழகம் உருவாக உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் வழியாக கொரோன வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் படி, தமிழக எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ள கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் வருகிற 2020 மார்ச் 31ம் தேதி வரை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin cancels admk event


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->