சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, மு.க.ஸ்டாலின் சர்ப்ரைஸ் அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


இன்று சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இன்று உலகம் முழுவதும் சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தகைய நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். 

அதில்,"தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கணக்குப்படி இந்தியாவில் உள்ள 264 புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 10 சதவீதம் தமிழ்நாட்டில்தான் உள்ளது. 

புலிகள் பாதுகாப்பில் தமிழகத்தின் முன்னோடி முயற்சிகளுக்குப் பொருத்தமாக வருகிற அக்டோபர் மாதம் சென்னையில் ஒன்றிய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசால், உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin about tigers day announcement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->