அரசியலில் மீண்டும் களமிறங்கும் மு.க.அழகிரி?.. கோவையில் துவங்கிய பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் 2021 ஆம் வருடத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றவுள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலங்கள் உள்ள நிலையில், தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இதனையடுத்து ஆட்சியை மீண்டும் கைப்பற்ற அதிமுகவும், ஆட்சியை இந்த தேர்தலிலாவது கைப்பற்ற வேண்டும் என்று திமுகவும் பல கட்சிகளுடன் இரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

தமிழகத்தின் பிரதான கட்சிகளாக இருந்து வரும் திமுகவும், அதிமுகவும் பேச்சுவார்த்தை மற்றும் களப்பணிகளுக்கு நிர்வாகிகள் செயல்பாடு என்று இருந்து வரும் நிலையில், ஒருகாலத்தில் கொடிகட்டி பறந்த காங்கிரஸ் கட்சி கடந்த மாதம் 20 ஆம் தேதியே திருப்பூரில் உள்ள காங்கேயத்தில் தேர்தல் முகவர்கள் மற்றும் ஆலோசனை கூட்டத்தினை நடத்தி பிரச்சாரத்தை துவங்கியது.

மேலும், தேர்தல் பரபரப்பிற்காக கட்சியின் தங்களின் ஆளுமை உள்ள இடங்களில் தங்களது கட்சியின் சின்னம் மற்றும் தலைவரின் பெயரையும் பதிவு செய்து வருகின்றனர். திரைத்துறையில் இருக்கும் பலரையும் ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்த சுவரொட்டியும் பெரும் வைரலானது. 

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியை அரசியலுக்கு அழைத்து கோவை மாநகர பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இந்த சுவரொட்டியில், " அஞ்சா நெஞ்சமே.. நேரம் நெருங்கிவிட்டது.. கழகத்தின் கலைஞர் ஆட்சி அமையட்டும் " என்ற வாசகங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Alagiri Supporters call to Enter Politics in Coimbatore


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->