அவுங்கள விடுங்க.. சின்னப்பசங்க.. விஜய் ரசிகர்களை கலாய்த்த அமைச்சர்.!! - Seithipunal
Seithipunal


மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு திட்டம் குறித்து வரும் கூட்டத்தொடரில் வலியுறுத்துவோம் என்று கூறினார். 

மு.க. ஸ்டாலின் அரசுக்கு எதிராக ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார் என்றும், தமிழகத்தில் பாஜக வளரவே வளராது என்றும் கூறினார். இதனை போன்று இலங்கை தமிழர்கள் மற்றும் நீட்தேர்வு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றும், தனது பெயர் பத்திரிகைகளில் வரவேண்டும் என்பதற்காக அரசு மீது தொடர்ந்து குறை கூறி வருவதாகவும் தெரிவித்தார். 

எதிர்கட்சி பாராட்ட வேண்டும் என்று நினைப்பது இல்லை என்றும், திராவிடம் என்பது குதிரைக்கொம்பு போன்றது என்றும் தெரிவித்தார். விஜய் ரசிகர்கள் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா போல சித்தரிக்கப்பட்டு இருந்த விஜய் - சங்கீதா போஸ்டர் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, " விஜய் ரசிகர்கள் சிறுபிள்ளைத்தனமாக சுவரொட்டி ஒட்டி வருகின்றனர் என்றும், விஜய் திரைத்துறையில் நன்றாக வளர்ந்து வரக் கூடியவர் என்றும், தமிழர்... நல்ல நடிகர் அவ்வளவுதான் " என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minster sellur K Raju Pressmeet 29 Aug 2020 about vijay


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->