இன்று 2,783 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கோவேக்சின் மற்றும் கோவிட்ஷீல்டு தடுப்பூசியானது இன்று செலுத்தப்பட்டது. மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவங்கி வைத்தார். இந்நிலையில், தற்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " தமிழகம் முழுவதும் 166 மையத்தில் 16,600 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், முதற்கட்டமாக 2,783 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2684 கோவிட்ஷீல்டு தடுப்பூசியும், 99 கோவேக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 

தலைநகரில் மொத்தமாக 348 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இதில் 38 கோவேக்சின் தடுப்பூசி மற்றும் 310 கோவிட்ஷீல்டு தடுப்பூசியும் ஆகும். சேலத்தில் 288 பேருக்கும், திருப்பூரில் 195 பேருக்கும், மதுரையில் 146 பேருக்கும், திருவள்ளூரில் 146 பேருக்கும், திருவாரூர் மற்றும் கடலூரில் 103 பேருக்கும், தஞ்சாவூரில் 40 பேருக்கும், செங்கல்பட்டில் 20 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் யாருக்கும் எந்த விதமான பக்கவிளைவும் இல்லை " என்று தெரிவித்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Vijayabasker Pressmeet about Corona Vaccine 16 Jan 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->