கரோனா பரிசோதனை மையம்.. மதுரையில் அமைக்க உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


இந்திய நாட்டில் கரோனா வைரஸிற்கு 562 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸின் அதிதீவிர பரவும் தன்மையின் காரணமாக இன்றிரவு 12 மணிமுதலாக வரும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், இந்த வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நபர்களில் பூரண நலன் பெற்று 41 பேர் இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர். 519 இந்தியர்களுக்கும், 43 வெளிநாட்டினருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர், இந்நாள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு கரோனா தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ கருவிகள் வாங்குவதற்காக முதற்கட்டமாக ரூ.3 கோடி நிதிஉதவி அளித்துள்ளார். 

இந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள தகவலின் படி, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கரோனா நோய்த்தொற்று அறிகுறியுடைய நபர்களை பரிசோதனை செய்யும் ஆய்வகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தமிழகத்தின் 8 ஆவது சோதனை மையமாகவும் திகழும் என்றும், மதுரை வட்டாரத்தில் அதிகளவு இரத்த மாதிரிகளை சேகரிக்க உதவும் என்றும் தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister vijayabaskar twit about corona virus testing lab


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->