BCG தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை - அமைச்சர் விஜயபாஸ்கர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 1,438 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது. நேற்று  861 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 15,762 ஆக உயர்ந்துள்ளது. நேற்று  12 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடுகிறது. இறப்பு, பரிசோதனைகளை குறைத்துச் சொல்வதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது.

கொரோனா பாதிப்பு விவரங்களை அரசு மறைக்கிறது என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல. கொரோனாவை கண்டறிய தனியார் பரிசோதனை மையங்களுக்கான கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

கொரானோ பரிசோதனைக்கு தனியார் மையங்களுக்கு ரூ.4500 என ஐ.சி.எம்.ஆர் கட்டணம் நிர்ணயித்த நிலையில் தமிழக அரசு ரூ.3000 ஆக குறைத்துள்ளது. BCG தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம். BCG தடுப்பூசி மூலம் வயதானவர்களுக்கு சிகிச்சை தருவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிளாஸ்மா, remdesivir மருந்துகளை தொடர்ந்து BCG தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister vijayabaskar says about bcg


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->