#Breaking: டி.என்.இ.பி தனியார் ஆட்கள் சேர்ப்பு அரசாணை இரத்து - மின்சாரத்துறை அமைச்சர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி சென்னையில் உள்ள அண்ணாசாலையில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " தமிழக மின்சாரத்துறை எப்போதும் தனியார்மயம் ஆகாது. தனியார் ஊழியர்களை ஒப்பந்த முறையில் பணியமர்த்தும் நடவடிக்கைக்கான ஆணை இரத்து செய்யப்படுகிறது.

மின்வாரியத்திற்கு அவதூறான பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தனியார்மாயம் என்ற வாதத்தை முன்வைத்து போராடி வருகிறார்கள். மின்சார வாரியத்திற்கு தனியார் ஊழியர்கள் 30 ஆயிரம் பேரை தற்காலிகமாக பணியமர்த்தும் அரசாணை திரும்ப பெறப்பட்டுள்ளது. அவுட்சோர்சிங் மூலமாக பணியமர்த்தும் நடவடிக்கைக்கு பிறப்பிக்கப்பட்ட அரசாணையும் இரத்து செய்யப்படுகிறது. 

பேச்சுவார்த்தைக்கு வரமறுத்து மின்வாரிய தொழிற்சங்கங்கள் போராடி வருவது எப்படிப்பட்டது?.. பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால், தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு வர மாறுகிறது. நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் திரும்ப பெறப்பட்டால், உடனடியாக 10 ஆயிரம் பேரை பணியமர்த்த முடியும். அவுட்சோர்சிங் மூலமாக 30 ஆயிரம் பேர் பணியமர்த்தப்படவுள்ளதாக வெளியான தகவலும் தவறானது.

ஆட்கள் பற்றாக்குறை காரணமாக தற்காலிக ஊழியர்கள் நியமனத்திற்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், தொழிற்சங்கத்தின் தவறான வழிமுறையால் அரசின் செயல்பாடுகள் வேறு மாதிரி திரிக்கப்பட்டுள்ளது.  இதில்,வாட்சாப்பில் வேண்டும் என்றே போலியான தகவலையும் பரப்பியுள்ளனர் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Thangamani Pressmeet 21 December 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->