திமுகவின் பச்சோந்தி தனத்தால் காங்கிரஸ் கட்சியே பதற்றத்தில்..? இரகசிய சந்திப்பின் பின்னணி.! - Seithipunal
Seithipunal


அதிமுக ஆட்சியை கனவில் கூட கவிழ்க்க முடியாது என்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கூறினார்.

இது குறித்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தான் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. ஊழல் கட்சி திமுக. ஊழலுக்காக திமுக அரசு கலைக்கப்பட்டது.

அம்மாவால் உருவாக்கப்பட்ட அரசை கவிழ்க்க திமுகவும், டிடிவி.தினகரனும் முயற்சி செய்து வருகின்றனர். அது கனவில் கூட நடக்காது. இது அம்மாவின் அரசு. மக்கள் ஆட்சி நடந்து வருகிறது. ஆகையால்தான் இரண்டாவது முறையாக கழக அரசை ஆட்சியில் அமர்த்தினர்.

கழக ஆட்சியை குறை கூற முடியாமல் எதிர்க்கட்சியினர் திணறி வருகின்றனர். மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார்.

பின்னர் கொல்கத்தா சென்று மம்தாவை சந்தித்தார். தற்போது சந்திரசேகரராவை சந்திக்கிறார் திமுகவின் பச்சோந்தி தனத்தால் காங்கிரஸ் கட்சியே பதறி போயுள்ளது. ஆகையால் பொதுமக்கள் சிந்தித்து வாக்களியுங்கள்.

மக்கள் திட்டங்களை தடுக்கும் திமுகவையும், துரோக கட்சியான அமமுகவையும் புறக்கணித்து கழகத்திற்கு வாக்களியுங்கள்.

கழகத்தின் வெற்றி உறுதியாகி விட்டது. கழக அரசு தமிழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மடிகணினி வழங்கும் திட்டம், விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம், பாடபுத்தகம் வழங்குதல், 4 செட் பள்ளி சீருடைகள் என கல்விக்கான அத்தனையும் விலையில்லாமல் வழங்கி கல்வியில் புரட்சி செய்து வருகிறது.

கிராம மக்களின் வாழ்வாதரம் உயரும் வகையில் ஆடுகள், மாடு, கோழிகுஞ்சுகள் ஆகியவற்றை விலையில்லாமல் வழங்கினார். இதன் மூலம் மூலம் பல ஆயிரம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன.

தாலிக்கு தங்கம் 4 கிராமில் இருந்து 8 கிராமாக உயர்த்தி திருமண நிதியுதவியுடன் வழங்கப்படுகிறது. அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு, அம்மா மருந்தகம் என பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு குடும்பமும் அரசின் திட்டங்களை பெறாதவர்களே இருக்க முடியாது. அவ்வளவு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது' என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister sevur ramachandiran speech


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->