மின்கட்டணம் செலுத்த மேலும் கால அவகாசம் தேவையற்றது - மின்சாரத்துறை அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். 

கரூர் மாவட்டத்தில் உள்ள படிக்கட்டுதுறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தொகையான ரூபாய் 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தினை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். 

பயனாளிகளுக்கு ரூபாய் 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்களை வழங்கிய அமைச்சர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த போதுமான அவகாசம் வழங்கப்பட்டு விட்டது. 

தற்போது ஊரடங்கில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு மேல் கால அவகாசம் தேவைப்படாது என நான் கருதுகிறேன். இதனால் மின்சார கட்டணம் செலுத்த இன்றே கடைசிநாள். காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்படமாட்டாது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Senthil Balaji Pressmeet at Karur about Electricity Bill Due Date 15 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->