அடடே.. நம்ம அமைச்சரா இது?.. கொடைக்கானலில் வெக்கேஷன்..! - Seithipunal
Seithipunal


தேர்தலுக்காக கடுமையான உழைப்பை வெளிப்படுத்த அமைச்சர் செல்லூர் ராஜூ, தற்போது கொடைக்கானலில் குளுகுளு சூழ்நிலையில் குடும்பத்துடன் ஓய்வு எடுத்து வருகிறார். 

அமைச்சர்களில் சிரித்து மக்களை கவரும் குணம் கொண்ட அமைச்சராக இருந்து வருபவர் செல்லூர் ராஜூ. கட்சியிலும் சரி, பொது இடத்திலும் சரி, கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் சரி யாரிடமும் எந்த விதமான கோபமும் இல்லாமல் அமைதியாக பேசுவார். 

எதோ ஒரு சூழ்நிலையில் ஆவேசத்தோடு யாரும் பேசினாலும், கோபத்தோடு வந்தாலும் அவர்களை அன்போடு அழைத்து இன்முகத்துடன் அரவணைத்து செல்வார். நெட்டிசன்கள் மூலமாக ஒரு காலகட்டத்தில் மக்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்ட அமைச்சரும் இவர் மட்டும் தான். 

கடந்த சில வாரங்களாக கொளுத்தும் வெயிலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, ஓய்வுக்காக கொடைக்கானல் சென்றுள்ளார். தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலை சுற்றிப் பார்த்து வரும் நிலையில், கொடைக்கானல் ஏரியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் காலையில் வாக்கிங் செல்வது என்று தொடர்ந்து வருகிறார். 

வெள்ளை வேட்டி, குங்கும பொட்டு என்று இருந்து வந்த நிலையில், மஞ்சள் டீ சர்ட், கருப்பு கண்ணாடி என்று மார்டனாக வலம் வருகிறார். இவரை முதலில் அடையாளம் காணாது இருந்த பலரும், பின்னர் இது அமைச்சர் செல்லூர் ராஜு என்று அடையாளம் கண்டு வணக்கம் தெரிவிக்க, பதிலுக்கு அவரும் சிரித்தவாரே வணக்கத்தை வைத்து நடைபயிற்சி மேற்கொண்டார். பலரும் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியடைந்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Sellur K Raju Enjoy Vacation on Kodaikanal 18 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->