கோவில் நகைகளை உருக்கி தங்கக்கட்டியாக மாற்றும் விவகாரம் - அமைச்சர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


கோவில் நகைகளை உருக்கும் நடவடிக்கையில் இலாப நோக்கம் இன்றி, நேர்மையாக மற்றும் தூய்மையாக அரசு செயல்படும் என அமைச்சர் சேகர் பாபு உறுதியளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் உள்ள தங்க நகைகள் போன்றவற்றை உருக்கி, தங்க கட்டிகளாக மாற்றி அதனை வைப்பு நிதியில் வைத்து வரும் தொகையை பயன்படுத்தி கோவிலுக்கு தேவையான பணிகள் செய்யப்படும் என தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார். இந்த அறிவிப்பு எதிர்ப்பும், வரவேற்பும் என இருதரப்பு விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், கோவில் நகைகள் தங்க கட்டியாக மாற்றப்படும் விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார். 

இதுதொடர்பாக அமைச்சர் பேசுகையில், " கோவில் நகைகளை உருக்கும் நடவடிக்கையில் இலாப நோக்கம் இன்றி, நேர்மையாக மற்றும் தூய்மையாக அரசு செயல்படும். கோவிலில் பயன்படாமல் உள்ள எதுவும் தெய்வத்திற்கு பயன்படும் எனில், அதனை செயல்படுத்தவும் தயங்கமாட்டோம் " என்று தெரிவித்தார். 

முன்னதாக தமிழக அரசின் கோவில் தங்க நகைகளை உருக்கி, தங்க கட்டியாக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என்று முன்னாள் எம்.பி இராமலிங்கம் வைத்த கோரிக்கைக்கு அமைச்சர் சேகர் பாபு பதில் அளித்து இருக்கிறார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister SekarBabu Pressmeet at Madurai Today 25 Sep 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->