தமிழ் மக்களின் காவலர் நம் முதல்வர்.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனாவால் ஊரடங்கு ஆறாவது முறையாக ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பல அதிரடி கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1,201 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரையில் சென்னையில் கொரோனா கடுமையான அளவு அதிகரித்துள்ளது. மதுரை, தேனி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களிலும் கொரோனா தனது தாக்கத்தினை காண்பித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் தலைமையில் பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், " தமிழக முதல்வர் இரவு பகல் பாராது மக்களுக்காக பணியாற்றி வருகிறார். பல அமைச்சர்களும், அதிகாரிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். தமிழக முதல்வரை மக்கள் வாழ்த்துகிறார்கள், பாராட்டுகிறார்கள், தங்களின் காவலராக எண்ணுகிறார்கள். அரசு பணியாளர்களில் இருந்து அனைவரும், தங்களின் உயிரை பணயம் வைத்து மக்களுக்கான பணியை செய்து வருகின்றனர் " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister RB Udayakumar speech about Edappadi Palanisamy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->