இராசபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேட்புமனுத்தாக்கல்..! - Seithipunal
Seithipunal


இராசபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுக சார்பாக சட்டமன்ற உறுப்பினருக்கான வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அமைச்சர் கே. டி ராஜேந்திர பாலாஜி 15.03.2021 அன்று காலை 12:00 மணி அளவில் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

அதன்படி, இன்று மதியம் 12 மணியளவில் இராசபாளையம் சட்டமன்ற வேட்பாளர்களாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் கே.டி. இராஜேந்திர பாலாஜி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதன்போது, அதிமுக கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். 

இதனைப்போன்று, அதிமுகவின் கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினரும், அமைச்சருக்கு ஆதரவாக உடன் சென்று வேட்புமனுத்தாக்கல் நிகழ்வை சிறப்பித்தனர். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் நா. காளிதாசன் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியினர் உடன் சென்றனர். 

முன்னதாக நேற்றைய தினத்தில் (14/03/2021) அஇஅதிமுக இராஜபாளையம் சட்டமன்றதொகுதி பொறுப்பாளர் கிருஷ்ணராஜ், அஇஅதிமுக நகரசெயலாளர் ராணா பாஸ்கர், இளைஞர்கள் சங்க அஇஅதிமுக மாவட்ட செயலாளர் துரைமுருகேசன் ஆகியோரை விருதுநகர் மாவட்ட மாநில பாமக இளைஞர்கள் சங்கத்தினர் மரியாதை நிமித்தமாக சந்தித்துக்கொண்டனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Rajendra Balaji Submit Rajapalayam Constituency Election Candidate AIADMK 2021 Election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->