தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை?.. அமைச்சர் எச்சரிக்கை.. புகார் எண் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படும் பட்சத்தில் 1800 4256 151 என்ற கட்டணமில்லா அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

அக். 14 ஆம் தேதி ஆயுதபூஜை, 15 ஆம் தேதி சரஸ்வதி பூஜை, 16 ஆம் தேதி சனிக்கிழமை, 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக, வெளியூரில் தங்கியிருந்து பணியாற்றி வரும் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். 

தமிழக அரசின் சார்பில் சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சென்னை கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி பேருந்து நிலையங்கள் தற்காலிக வெளியூர் பேருந்து முனையமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளும் கட்டண கொள்ளையை தீவிரப்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், பண்டிகை விடுமுறை காலத்தினை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் எடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் இராஜகண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படும் பட்சத்தில் 1800 4256 151 என்ற கட்டணமில்லா அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Rajakannappan Warn Private Omni Bus Fare Is Raise During Festival Leave Periods


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->