தமிழக அரசின் நிவர் புயல் நிவாரணம்.! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதி தீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையை கடந்துவிட்டது. இரவு 11.30 முதல் அதிகாலை 2.30 மணிவரை இந்த புயல் கரையை கடந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகம், புதுச்சேரியில் கடந்த 5 மணிநேரம் இடியுடன் கூடிய தீவிர கனமழை பெய்துள்ளது. புதுச்சேரி, கடலூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கனமழை பெய்துள்ளது.

அரியலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், காரைக்கால், திருச்சி, திருப்பத்தூரில் மிதமானது முதல் கன மழை பெய்துள்ளது.

நிவர் புயல் குறித்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அளித்துள்ள பேட்டியில், 

"புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் 11.30 மணி முதல் 2.30 வரை நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்துவிட்டது. தீவிர புயலாக வலுவிழந்த நிகர் புயல் கரையை கடந்துள்ளது.

இந்த புயல் முழுவதும் கரையை கடந்துவிட்டது. ஆனால் கனமழை நீடிக்கும். புயல் விவரம் விரைவில் அறிவிக்கப்படும். தமிழக முதல்வர் நிவாரண பணிகளை அறிவிப்பார்.

தமிழகம் 100 சதவீதம் பாதுகாப்புடன் இந்த புயலை கடந்திருக்கிறோம்." என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister press meet nivar cyclone


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->