#BREAKING :: திடீர் மரணம்... அமைச்சர் பொன்முடியின் சகோதரர் தியாகராஜன் காலமானார்..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரரும் மருத்துவருமான தியாகராஜன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் இன்று அதிகாலை பிரிந்தது. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரர் தியாகராஜன் சிறுநீரக சிறப்பு நிபுணராக இருந்து வந்தார்.

அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிரகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். டாக்டர் தியாகராஜனின் உடல் அவரது சொந்த மாவட்டமான விழுப்புரத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு பொதுமக்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் உள்ள விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் என பலர் டாக்டர் தியாகராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிறகு இன்று மாலை அவர் வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் நடைபெற்று மருதூர் இடுகாட்டில் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Ponmudi brother Thiagarajan passed away


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->