கேரள எல்லைப்புற மாவட்டங்களில் கண்காணிப்புகள் தீவிரம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் மீனாட்சி எஞ்சினியரிங் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை பார்வையிட்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் பேசினார். 

தற்போது தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 1 ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில், கல்லூரி மாணவர்கள் - பேராசிரியர்கள், பிற பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், " மாணவர்கள், களப்பணியாளர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரும் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அனைத்து மாணவர்களும் தடுப்பூசியை செலுத்துகிறார்களா? என நிர்வாகம் கவனித்து வருகிறது. 

கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள எல்லையில் இருக்கும் 9 மாவட்டத்தில் கூடுதலா முகாம்கள் நடத்தி, பரிசோதனையை தீவிரப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலையில் இருந்து இரவு வரை நடைபெறும் தடுப்பூசி முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறேன். 

ஆசிரியர்கள் தேர்தல் பணிகள் மற்றும் கல்வி பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அவர்கள் தங்களை பொதுப்பணிகளில் ஈடுபடுத்தி வருவதால், அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சியில் 42 இலட்சத்து 45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister M Subramaniyan Says Kerala Tamilnadu Border Districts Corona Surveillance


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->