தமிழகத்திற்கு பிரச்சனையென்றால் பார்த்துக்கொண்டு இருக்க அம்மா சொல்லிக்கொடுக்கவில்லை.. அமைச்சர் அதிரடி பேச்சு.! - Seithipunal
Seithipunal


அதிமுக 49 ஆவது வருட துவக்க விழாவினை சிறப்பிக்கும் பொருட்டு தர்மபுரி மாவட்ட கழக அலுவலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் மூலமாக தமிழகம் சிறப்பான ஆட்சியை பெற்று வருகிறது. அன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்ட கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஜெயலலிதா தெரிவித்தது போல 100 வருடம் அதிமுக அப்படியே இருக்கும். தனது பணியை சிறப்பாக செய்து வரும். இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை தர்மபுரி பெற்று தந்தது. வரும் சட்டமன்றத்தேர்தலிலும் தர்மபுரியில் 5 தொகுதியிலும் அமோக வெற்றியை பெறுவோம். 

தமிழகத்திற்கு தீமை என்றால், அதனை என்றுமே நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டோம். தமிழகத்திற்கு எதிராக இருக்கும் திட்டங்களை எதிர்க்கும் கொள்கையை வைத்தே ஜெயலலிதா எங்களை வழிகாட்டி வளர்த்துள்ளார். அதன்வழியிலேயே தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் செயல்பட்டு வருகின்றனர். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாதாடி பெற்றுக்கொடுத்த 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை இழக்க அதிமுக தயாராக இல்லை. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்பது அரசின் கொள்கை முடிவு. இது இன்று எடுக்கப்பட்டதல்ல. முன்னதாகவே பிரச்சனையை கண்டறிந்து தீர்க்க முடிவு செய்யப்பட்டது. தமிழகத்திற்கு தீங்கு ஏற்பட்டால் நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister KP Anbazhagan Pressmeet in Dharmapuri 19 Oct 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->