சீட்டுக்காக கட்சி தாவியவர்களுக்கு நெத்தியடி பதில் - அமைச்சர் கடம்பூர் ராஜு அதிரடி.! - Seithipunal
Seithipunal


இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறி பிற கட்சிகளுக்கு தாவி சென்றவர்கள், அரசியல் தற்கொலை செய்துகொண்டவர்களாக கருதப்படுவார்கள் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கட்சியின் சார்பில் 177 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போடி தொகுதியிலும் களம்காண்கின்றனர்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக உள்ள கடம்பூர் ராஜு கோவில்பட்டி தொகுதியில் களம்காண்கிறார். இந்நிலையில், திருச்செந்தூர் கோவிலில் ஸ்ரீ சுப்பிரமணியனை தரிசித்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்தை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கினர். இதன்பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " மக்களுக்காக கட்சியில் பணியாற்றும் போது வேட்பாளர் அறிவிப்பை எதிர்பார்த்து பணியாற்ற கூடாது. 

இந்த தேர்தலில் இல்லையென்றால் அடுத்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும். இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறி அமமுகவில் அல்லது பிற கட்சிகளுக்கு தாவி சென்றவர்கள், அரசியல் தற்கொலை செய்துகொண்டவர்களாக கருதப்படுவார்கள் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Kadambur Raju Pressmeet about MLA party out of frustration is a Political Suicide 14 March 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal