திமுகவின் இரட்டை வேடங்கள் எத்தனை?.. என்னென்ன சம்பவங்கள்.. புட்டுப்புட்டு வைத்த அதிமுக அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியை அடுத்துள்ள கயத்தாறு மற்றும் கடம்பூர் தொகுதிகளில் அதிமுக 49 ஆம் வருட துவக்க விழாவினையொட்டி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஏழை எளிய மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் செய்தார். இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " திமுக கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் திரைப்பட பிரச்சனைகள் இரட்டைவேடமிட்டு வருகிறது. தமிழக மக்கள் இனியும் திமுகவை நம்பி ஏமாற தயாராக இல்லை. பல விஷயங்களில் திமுக அப்பட்டமாக இரட்டை வேடம் தயாரித்திருக்கிறது. 

தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் ஹிந்தி மொழியில் பேசுவதை பெருமையாக கருணாநிதி பேசியிருந்தார். மத்திய அரசின் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் இந்தி மொழி பயிற்றுவிக்கப்பட்ட வருகிறது. இப்பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளை திமுக எம்.பிக்கள் பயிற்றுவிக்க வைக்கின்றனர். இதற்கான டோக்கனையும் பெற்று வருகின்றனர். 

உண்மையில் இவர்கள் இந்தியை எதிர்க்கிறார்கள் என்ற பட்சத்தில், கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் பெற்ற இடங்களை திருப்பி ஒப்படைத்து பாராட்டுகளை பெறலாம். திமுகவினர் நடத்தி வந்த பல பள்ளிகளிலும் ஹிந்தி மொழி பயிற்றுவிக்கபட்டு வருகிறது. நீட் தேர்வு விவகாரம், ஜல்லிக்கட்டு, காவேரி நீர் பிரச்சனை மற்றும் நெய்வேலி தொடர்பான விவகாரத்திலும் திமுக இரட்டை வேடம் தரித்துள்ளது.

ஜல்லிக்கட்டை மீட்டு, மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்தது அதிமுக அரசு தான். தமிழர்களின் உரிமைகள் மற்றும் இலட்சியங்கள் என அனைத்தையும் திமுக காவுகொடுத்துவிட்டு, இன்று மக்களிடம் நீலிக்கண்ணீர் வடிகிறது. சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக. தமிழர்களை பாதுகாக்கும் ஒரேயொரு இயக்கம் அதிமுக மட்டும் தான். இனியும் திமுவை மக்கள் நம்பமாட்டார்கள் " என்று தெரிவித்தார்..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Kadambur Raju Pressmeet 21 Oct 2020 Trolled DMK


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->