மாணவர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் செய்த பெரும் நெகிழ்ச்சி செயல் - அமைச்சர் செங்கோட்டையன்.! - Seithipunal
Seithipunal


கிராமங்களில் விளையாட்டுகளை ஊக்குவிக்க ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " நமது சிந்தனையை சரியாக பயன்படுத்த யோகா பயன்படும். யோகா பயிற்சி மேற்கொள்பவர்கள் வாழ்க்கையில் வெற்றிவாகை சூட்டியுள்ளனர். 

இதனை கருத்தில் கொண்டு ஈரோட்டில் உள்ள 4 உள்விளையாட்டு அரங்கை தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார். இதற்கான நிதியையும் வழங்கியுள்ள முதல்வருக்கு நன்றிகள். தேர்வுக்கான அட்டவணை வெளியிட்டது ஏற்கனவே தயார் செய்துவிடப்பட்டது. 

சி.பி.எஸ். சி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், இது குறித்து என்னிடம் தமிழக முதல்வர் கேட்டார். தேர்வு தேதிகள் தயாராக இருக்கிறது என்று கூறியதும், உடனடியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. என்.டி.எஸ்.இ தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வருடன் ஆலோசனை முடிவு இரண்டு நாட்களில் தெரிவிக்கப்படும். 

கிராமங்களில் விளையாட்டுகளை ஊக்குவிக்க ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister KA Sengottaiyan Pressmeet 17 Feb 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->