இளைஞர்கள் அரசு வேலைக்கு எல்லாம் ஆசைப்படக்கூடாது-அமைச்சர் ஜெயக்குமார்..! - Seithipunal
Seithipunal


இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்படக்கூடாது என சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத் தொடரானது  கடந்த 6 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி, வருகின்ற 9 ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. அதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்றை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற்று வருகிறது.

அப்போது சட்டப்பேரவையில் பேசிய தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்படாமல் தொழில் முனைவோர்களாக முயற்சி செய்ய வேண்டும் என்றார். 

மேலும், இளைஞர்கள் ஒரு ஹெக்டரில் மீன் வளர்ப்பு தொழில் செய்தால் 10 மாதத்தில் ரூபாய் 1 லட்சம் வருமானம் ஈட்டலாம் என்றும் மீன் வளர்ப்பு தொழிலுக்கு தமிழக அரசு மானியம் வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்தார். 

மேலும் மீன் அதிகம் சாப்பிட்டால் மாரடைப்பு, புற்றுநோய், கண் பார்வை கோளாறு உள்ளிட்டவை வராது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister jayakumar speech in assembly


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->