ஸ்டாலின் ஒரு பலூன் வியாபாரி... விமர்சித்து தள்ளிய அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


காயிதே மில்லத் அவர்களின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளி வாசலில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. 

துணை முதலமைச்சர் ஓ.பன்னிச்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, மாஃபா. பாண்டியன், முன்னாள் எம்பி தம்பிதுரை மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். அதற்குப் பிறகு அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, 

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் காயிதே மில்லத் என புகழாரம் சூட்டினார். மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யப்படவேண்டும் என்பது அரசின் நிலைப்பாடு என்று கூறினார். 

மேலும், தமிழ்நாட்டில் உள்ள வெற்றிடத்தை நிரப்பி விட்டதாக ஸ்டாலின் பேசியிருந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அப்பாவுக்கு பிறகு பிள்ளை என்று மு.க. ஸ்டாலின் தனது குடும்ப வெற்றிடத்தை வேண்டுமானால் நிரப்பி இருக்கலாம். ஜெயலலிதா இல்லாத இடத்தை அதிமுகதான் நிரப்பும். மேலும் ஸ்டாலின் ஒரு பலூன் வியாபாரி என்று விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister jayakumar says stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->