மாணிக் பாட்ஷா போல, மாஸ் காண்பித்து இறங்கி வந்த அமைச்சர்.. வைரலாகும் வீடியோ..!! - Seithipunal
Seithipunal


தமிழக அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் ஜெயக்குமார். இவர் இராயபுரம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சிறு வயதில் இருந்து துடிதுடிப்புடன் பணியாற்றும் வேகம், தொகுதி மக்களுக்கு உதவிகளை செய்யும் நபர் என்று எந்த நேரமும் பரபரப்பாக இருந்து வருபவர். 

அரசியல் களத்தில் ஆவேசப்பட்டால் ரணகளமான பேச்சுகளும் என, பிற நேரங்களில் அனைவரிடமும் அன்போடு பழகும் எளிமையான குணம் கொண்டவர் என்றும், சில நேரங்களில் குழந்தைத்தனமான மனத்தால் மக்களிடம் மதிப்பு பெற்றவர் என்றும் நல்ல மனிதராக இருந்து வருபவர். 

இவருக்கு விளையாட்டுகளின் மீது இருக்கும் தீராத காதலை பலமுறை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சிறு வயதில் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டு இருந்த புகைப்படத்தை பதிவு செய்து மிகவும் பாராட்டுகளை பெற்றவர். 

இந்த நிலையில், இவரது வீடியோ பதிவு ஒன்று பாட்ஷா பட பாட்டுடன் வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோவில் எங்கு? எப்போது? எடுக்கப்பட்டது என்பது தொடர்பான விபரம் இல்லை. ஆனால், அந்த வீடியோ காட்சியில் மண்டபத்தில் இருந்து கீழே இறங்கும் அமைச்சர், நடிகர் ரஜினிகாந்த் வேகமாக படிக்கட்டுகளில் இறங்குவது போல இறங்குகிறார்.

இதனை விடியோவாக பதிவு செய்த நபர், அதன் பின்னணியில் பாட்ஷா படத்தின் இசையினை வைத்து எடிட்டிங் செய்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Jayakumar Came Steps Baasha Movie Rajinikanth Style


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->