அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக உள்ளடி வேலை பார்த்த உடன்பிறப்புகள்.. வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


2021 சட்டசபை தேர்தலில் தன்னை தோற்கடிக்க உள்ளடி வேலையை உட்கட்சியாட்களே செய்ததாக அமைச்சர் துரைமுருகன் ஆதங்கத்துடன் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி சட்டசபை தொகுதியின் வடக்கு ஒன்றிய திமுக உறுப்பினர்கள் கூட்டம் பொண்ணையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் துரைமுருகன் தொண்டர்களிடையே உரையாற்றுகையில், " கடந்த 1971 ஆம் வருடம் முதல் காட்பாடி, வேலூர் தொகுதிகளில் மகத்தான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வருகிறேன். 

மேல்பாடி மற்றும் பொண்ணை பகுதிகள் திமுகவின் கோட்டை என்றே கூறலாம். ஆனால், தற்போது 6 ஆயிரம் வாக்குகள் பின்தங்கி இருக்கிறோம். காட்பாடி யூனியனில் உள்ள கிராமங்களில் பெரும்பாலான பூத்களில் வாக்கு எண்ணிக்கையில் பின்தங்கி இருந்தோம். திமுக நிர்வாகிகளே எனக்கு உள்ளடி வேலை பார்த்துவிட்டனர். உள்ளடி வேலை பார்த்தது யார் யாரென எனக்கு தெரியும். 

அவர்களின் பட்டியலே என்னிடம் உள்ளது. அவர்கள் என்னை தோற்கடிக்க விரும்பினார்கள். இறைவனின் அருளால் இறுதியில் வெற்றியடைந்தேன். என்னை தோற்கடிக்க நினைத்து உள்ளடி வேலை பார்த்தவர்களுக்கும் அமைச்சராக உள்ளேன். மறப்போம்., மன்னிப்போம் என்று அண்ணாதுரை கூறியதை போல, உள்ளாட்சி தேர்தலில் நிர்வாகிகள் இரட்டிப்பாக வேலை செய்ய வேண்டும். 

திமுக உள்ளாட்சி தேர்தலில் அதிகளவு எண்ணிக்கையில் வெற்றியடையாத பட்சத்தில் துரோகம் செய்தவர்களை பாரபட்சமின்றி திமுகவில் இருந்து நீக்கிவிடுவேன். காட்பாடி யூனியன் என்னை கைவிட்டது சிறிதளவு வருத்தம் என்றாலும், இறுதி நேரத்தில் தபால் வாக்குகளே எனக்கு கைகொடுத்தது " என்று பேசியுள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Duraimurugan Talks about 2021 Election victory 26 July 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->