தோட்டனூர்|| இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் இறுதி கட்டபணி: அமைச்சர் சக்கரபாணி ஆய்வு! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம், தோட்டனுாத்து கிராமத்தில் ரூ.17.17 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமினை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மறுவாழ்வு முகாம் பகுதியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி, ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் மற்றும் பூங்கா, நுாலகம் அமைக்கப்படவுள்ள இடங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

தோட்டனுாத்து கிராமத்தில் புதியதாக இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கிராமத்தில், 321 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கான கட்டுமான பணிகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், ரூ.15.89 கோடி மதிப்பீட்டில் 321 வீடுகள் கட்டும் பணிகள், ரூ.10.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் மற்றும் பைப்லைன் அமைத்தல் பணிகள், ரூ.20.87 லட்சம் மதிப்பீட்டில் 420 மீட்டர் துாரம் தார்ச்சாலை அமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், ரூ.66.21 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைத்தல் பணிகள், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மின்கம்பங்கள் நடுதல் மற்றும் தெரு விளக்குகள் அமைத்தல் பணிகள் என மொத்தம் ரூ.17.17 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது, கட்டுமான பணிகள் முடிவடைந்து வீடுகளுக்கு வர்ணம் பூசுதல், குடிநீர் தெரு குழாய்கள் பொருத்துதல், கழிவுநீர் உறிஞ்சி தொட்டிகள், வீடுகளில் மின் இணைப்பு பணிகள், தெரு விளக்குகள் அமைத்தல் போன்ற இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Chakrapani inspects Thotanur Camp


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->