எம்ஜிஆர் ஆட்சிக் காலத்திற்கு அடுத்து எடப்பாடியார் ஆட்சியிலாவது விடிவு கிடைக்குமா..? உயிர் பயத்தில் பொதுமக்கள் - ஈரோட்டில் அவல நிலை.! - Seithipunal
Seithipunal


சத்தியமங்கலம் பகுதியில் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா ம.கொமரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட குழைந்தைகள் பயின்று வருகிறார்கள். இந்த கட்டிடம் கடந்த 43 வருடங்களுக்கு முன்பு எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், பழைய கட்டிடம் என்பதால் கட்டிடம் முழுமையாக சிதைந்து இடியும் நிலையில் உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி சட்ட மன்றஉறுப்பினரிடமும், சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்திலும் பல முறை அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு ளித்துள்ள நிலையில் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கட்டிடம் அதிக அளவில் சேதம் அடைந்துள்ளது. குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பது கிடையாது.

எனவே இந்த கட்டிடத்தை சீரமைத்து கொடுக்க வேண்டும். அல்லதுது புதியதாக கட்டிடங்களைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mgr period construction still in use


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->