கொட்டி தீர்க்கும் கனமழை., ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள்.!       - Seithipunal
Seithipunal


ரயில்பாதை சீரமைப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் மேலும் மூன்று  நாட்களுக்கு  ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வட கிழக்கு பருவமழை துவங்கிய நாள் முதலே மலை ரயில் பாதை அமைந்துள்ள மேட்டுப்பாளையம்,கல்லார் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. 

இதன் காரணமாக  மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு. கடந்த 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை  ரத்து செய்யப்பட்டது. 

இதற்கு பின் நேற்று முன்தினம் வழக்கமான ரயில் சேவை துவங்கியது, இந்தநிலையில் மீண்டும் கல்லார் - ஹில்கிரோ ரயில்நிலையம் இடையே மண் சரிவு ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது .

இதையடுத்து, ரயில் பாதைகள்  சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வந்தாலும். வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. எனவே சீரமைப்பு பணி, தீவிரமடையும் பருவமழையால் ரயில்பாதையில் நிலச்சரிவு ஏற்படும் என்பதால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேலும்  3 நாட்களுக்கு மலைரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

அந்த வகையில் 22,23,24 உள்ளிட்ட தேதிகளில் ரயில்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மலை ரயிலுக்கான ஆன்லைன் முன்பதிவும் 3 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mettupalayam train cancel for next three days


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->