தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது தற்போது காற்றழுத்த தாழ்வு மையமாக மாறி அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழையும், புதுவையில் லேசான மழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும் பதிவாக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் திருத்தணியில் 8 சென்டி மீட்டர் மழையும், கோவை மாவட்டம் சின்னக்கல்லார், திருப்பத்தூர் பகுதியில் ஏழு செண்டி மீட்டர் மழையும், கோவை மாவட்டம் வால்பாறை, திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் 5 சென்டிமீட்டர் மழையும், சேலம் மாவட்டம் மேட்டூர், திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் 4 சென்டி மீட்டர் மழையும் பெய்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதி, கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதி மற்றும் லட்சத் தீவு கடலோரப் பகுதி, மத்திய கிழக்கு வங்க கடல் பகுதி, அந்தமான் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், இப்பகுதிகளில் சூறாவளி காற்று 45 கிலோ மீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Meteorological center announcement 14 sep 2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->