குடும்ப சண்டையை வேடிக்கை பார்த்தவருக்கு கத்திக்குத்து.! குடிகார இளைஞனின் வெறிச்செயல்.!  - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை அருகே சுப்பிரமணி என்பவருக்கு சக்திவேல் என்று பிபிஏ பட்டதாரி மகனாக இருந்துள்ளார். இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக சில ஏற்பாடுகளை செய்து வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு மணிவேல் என்ற என்ற 25 வயது மகன் இருந்துள்ளார். இவர் அடிக்கடி குடித்துவிட்டு அக்கம் பக்கம் மற்றும் தனது வீட்டில் சண்டையிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

சம்பவ தினத்தன்றும் நள்ளிரவு நேரத்தில் அவருடைய வீட்டில் தகராறு செய்து கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது, சக்திவேல் பக்கத்து வீட்டில் வசித்து வருவதால் சத்தம் கேட்டு மொட்டை மாடியில் நின்று இவர்களுடைய வீட்டில் நடக்கும் சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். இதனால், ஆத்திரமடைந்த மணிவேல் ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடி அவர் நின்ற இடத்தில் சக்திவேலை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி இருக்கின்றார். 

சக்திவேலின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் சக்திவேல் உயிரிழந்துவிட்டார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு கதறி அழுதுள்ளனர். பின்னர், உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அப்பொழுது காட்டு பகுதியில் நின்றிருந்த மணி வேலை கைது செய்தனர். சிறுவயதிலிருந்தே சக்திவேல் மற்றும் மணி வேல் இருவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. மணிவேலின் தங்கையை சக்திவேல் காதலித்து வந்துள்ளார். இதனால், மணிவேல் அவரை கண்டித்துள்ளார். எனவே, இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. எனவே சம்பவ தினத்தில் மிகுந்த ஆத்திரத்தில் இருந்த மணிவேல் சக்திவேலை கத்தியால் குத்தி கொலை செய்து இருக்கின்றார் என்பது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

men killed by neighbor who watched his family fight  


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->