சூடுபிடிக்கும் சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கு.. ஆந்திரா, கேரளா மருத்துவர்களிடம் விசாரணை.!! - Seithipunal
Seithipunal


ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை 8-க்கும் மேற்பட்ட முறை பெற்று விற்பனை செய்த வழக்கில், சிறுமியின் தாய், வளர்ப்புத் தந்தை உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகள், மருத்துவர்களிடம் மருத்துவ உயர்மட்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சிறுமியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர், ஆந்திர மாநிலம் திருப்பதி, கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் செயல்படும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கருமுட்டைகள் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து ஈரோடு, பெருந்துறை மருத்துவமனைகளின் அலுவலர்கள், மருத்துவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து, தமிழக அரசின் சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையிலான மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ஈரோடு, பெருந்துறை, சேலம் மற்றும் ஓசூரில் உள்ள மருத்துவமனைகளில் விசாரணை மேற்கொண்டார். 

அடுத்தகட்டமாக குழுவினர் நேற்று மீண்டும் ஈரோடு வந்தனர். கருமுட்டை  விற்பனை வழக்கில் தொடர்புடைய திருப்பதி மற்றும் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு இக்குழுவினர் சம்மன் அனுப்பி இருந்ததால், அவர்கள் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் இக்குழுவின் முன்பு நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது ஏடிஎஸ்பி கணகேஸ்வரி காவல்துறையினர் மருத்துவமனை அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

medical team investigates for andhra and kerala doctors


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->