மதிமுக போராட்டத்தில் பாஜக பெண் நிர்வாகி தாக்கப்பட்டதற்கு எச்.ராஜா கண்டனம்.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரிக்கும், திருப்பூருக்கும் வருகைதரும் பிரதமர் மோடியை தனது தலைமையில், கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப் போவதாக ஏற்கனவே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்து இருந்தார்.

அதன்படி பிப்ரவரி 10 இன்று, திருப்பூர், பெருமாநல்லூர் பாஜக சார்பில் மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் அண்ணாசிலை அருகே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் எதிர்ப்பு போராட்டம் நடந்து வருகிறது.

இந்த பரபரப்பினால், அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களின் தர்ணா போராட்டத்திற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

போலீசாரை எதிர்க்கும் வகையில் மதிமுக தொண்டர் ஒருவர் மின்மாற்றியில் ஏறி போலீசாருக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். இதனால் அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களுக்கு இடையூரு ஏற்படுத்தும் வகையில் மதிமுகவினர் செயல்பட்டு வந்த நிலையில்., பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த பெண் நிர்வாகி சசிகலாவை கலவரகாரர்கள் தாக்கியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


இதனை கடுமையாக கண்டித்த பாரதிய ஜனதா கட்சியின் செயலாளர் எச்.ராஜா தனது கண்டனத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில்., அவர் கூறியுள்ளதாவது "பாஜக மகளிரணி நிர்வாகி சகிகலாவை தாக்கிய மாதிமுக குண்டர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்." என்று தெரிவித்திருந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mdmk strike in thirupur a bjp support woman under attack by mdmk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->