MBBS மற்றும் BDS மருத்துவ படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி.? - Seithipunal
Seithipunal


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று (செப்.22) முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.

சிறப்புப் பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு நேரடியாகவும், பொதுப் பிரிவினருக்கு ஆன்லைனிலும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்பிபிஎஸ் இடங்கள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

அதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போக, மீதமுள்ள இடங்கள் மாநில அரசு வசம் உள்ளன. அதேபோன்று, 20 தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பிடிஎஸ் இடங்களில் 1,254 இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன.

தனியாா் மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள இடங்கள் நிா்வாக ஒதுக்கீடாகும். அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவா் சோக்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 2022-2023-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று (22-ஆம் தேதி) தொடங்கி அக். 3 வரை நடைபெறவுள்ளது.

விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் : 22.09.2022

விண்ணப்பப் பதிவுற்கான கடைசி நாள்: 03.10.2022

இணையதள முகவரி : 1. www.tnhealth.tn.gov.in
2.www.tnmedical selection.org


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MBBS and BDS online apply from today


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->