#BigBreaking: சீர்காழி கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடக்கன்ஸில் ஒருவன் என்கவுண்டர்.. காவல்துறையை தாக்கி தப்பிக்க முயற்சி.! - Seithipunal
Seithipunal


சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரட்டைக்கொலையை அரங்கேற்றிய வடமாநில கும்பல், 16 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்ற நிலையில், ஒருவன் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளான்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் தங்க நகைக்கடை நடத்தி வருபவர் தன்ராஜ் சவுதாரி. இவரது மனைவி ஆஷா (வயது 45). இவர்களின் மகன் அகில் (வயது 28). இந்நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் இவர்களின் இல்லத்திற்கு 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்துள்ளது. இந்த கும்பல் வீட்டின் வாயிலை தட்டிய நிலையில், வீட்டின் கதவை திறந்ததும் உள்ளே நுழைந்த மர்ம கும்பல், ஆஷா மற்றும் அவரது மகன் அகிலை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து, வீட்டில் இருந்த 16 கிலோ தங்கத்தை கடத்தி சென்றுள்ளது. 

மேலும், இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த தன்ராஜுக்கும் சரமாரி அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து தன்ராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீரன் அதிகாரம் ஒன்று திரைப்பட பாணியில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஷா மற்றும் அகிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை எரம்கொண்டு வருகின்றார். மேலும், முதற்கட்ட தகவலாக இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் வடமாநில கும்பலாக இருக்கலாம் என்றும், வந்திருந்தவர்கள் வடமாநில இளைஞருக்கான அடையாளத்துடன் காணப்பட்டதாகவும், ஹிந்தி மொழியில் அவர்கள் பேசிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், காவல்துறையினர் கடலூர் மாவட்டத்தில் உள்ள எருகூர் கிராமத்தின் வயல் வெளியில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை பொதுமக்களின் உதவியுடன் கைது செய்த நிலையில், இவர்களிடம் இருந்து துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு குற்றவாளிகள் 2 பேரை கைது செய்ய தனிப்படை சென்னைக்கு விரைந்துள்ளது.

கடலூரில் கைதானவர்களை காவல் துறையினர் அழைத்து வருகையில், குற்றவாளிகள் காவல் துறையினரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயற்சி செய்துள்ளனர். காவல் துறையினரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் குற்றவாளிகள் செயல்படவே, காவல் துறையினர் துப்பாக்கியை காட்டி எச்சரித்துள்ளனர். 

இதனையும் கண்டுகொள்ளாது காவல்துறையினரை கொலை செய்ய முயற்சித்தால், காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகளில் ஒருவனை என்கவுண்டர் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கியால் காவல் துறையினர் சுட்டதில், குற்றவாளியில் ஒருவன் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayiladuthurai Seerkazhi Murder and Robbery Case Police Encounter one Culprit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->