மயிலாடுதுறையில் 10 அடிக்கு மேல் எழும் கடல் அலைகள்..!! கிராமங்களில் கடல் நீர் புகுந்ததால் மக்கள் அவதி..!! - Seithipunal
Seithipunal


மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக கொந்தளிப்புடன் காணப்படுகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக உள்ளது. கடல் சீற்றத்தின் காரணமாக கடலோர கிராமங்களில் 10 அடிக்கு மேல் கடல் அலை எழுகிறது. இதன் காரணமாக சீர்காழி தாலுக்கா தொடுவாய், மடவாமேடு, பூம்புகார் மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள கிராமங்களில் கடல் நீர் தடுப்புகளை கடந்து கிராமத்திற்குள் புகுந்துள்ளது. 

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை கடல்நீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதி மக்கள் செய்வதறியாது பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடல் நீர் புகுந்துள்ள கிராமங்களில் உள்ள மக்கள் புயல் பாதுகாப்பு மையங்களுக்கு தற்பொழுது செல்ல தொடங்கியுள்ளனர். 

கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு கடல் நீர் கிராமத்திற்குள் புகுந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தங்களுக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை செய்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayiladuthurai People suffer due to sea water entering villages


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->