16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. காமுக ஓட்டுநர் போக்ஸோவில் கைது.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுக ஓட்டுநர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளான்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் திருவாலங்காடு கிராமத்தை சார்ந்த 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். 

இதே பகுதியில் கார் ஓட்டுநராக பணியாற்றி வரும் அஜித் என்பவன் இருக்கிறான். இவன் சம்பவத்தன்று சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான். இதனையடுத்து, பதறிப்போன சிறுமி அங்குள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், காமுகன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து காமுகனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayiladuthurai Kuthalam 16 Year old girl Sexual Torture by Driver Police Arrest 10 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->