மயிலாடுதுறை | கொள்ளிடம் ஆற்றில் 4வது நாளாக வெள்ளப்பெருக்கு.! - Seithipunal
Seithipunal



மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் படுகை கிராமங்களான வெள்ள மணல், முதலை மேடு திட்டு, நாதல் படுகை உள்ளிட்ட கிராமங்களில் 45.4 ஹெக்டேர் விளைநிலங்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கின. மேலும், அப்பகுதி மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். 

இந்த நிலையில் சட்டம், நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்ட அமைச்சர் ரகுபதி மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர். அந்த கிராம மக்கள் 700 பேருக்கு தலா ரூ.1000 நிவாரணத் தொகையை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளதாவது,

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் உள்ளே உள்ள மக்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்கும், அப்பகுதியில் நிரந்தரமான புயல் பாதுகாப்பு மையம் அமைப்பதற்கும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால், தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள் குறித்து முழு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும்". என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mayiladuthurai kollidam floods aug


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->