டிசம்பர் 31 வரை தமிழக அரசுக்கு கெடு விதிப்பு! உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


தமிழக அரசு டிசம்பர் 31க்குள் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்காவிட்டால், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் அவசரக் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக மயிலாடுதுறையை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு நடப்பு ஆண்டில் தென்காசி, செங்கல்பட்டு உள்ளிட்ட பல புதிய வட்டங்களை அறிவித்துள்ளது. ஆனால், மயிலாடுதுறை மக்களின் நீண்டநாள் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. 

மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புக்கள் இப்பகுதியில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தின. அவ்வகையில், மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் அவசரக் கூட்டத்தில், வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் மயிலாடுதுறையை தலைநகராகக் கொண்ட புதிய மாவட்டத்தை அறிவிக்க தமிழக அரசு தவறினால் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலை மயிலாடுதுறை உள்கோட்டத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் புறக்கணிக்க வேண்டும் என 
தேர்தல் புறக்கணிப்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராம.சேயோன் வெளியிட்டுள்ளார்.

பேட்டி: வழக்கறிஞர் முனைவர் ராம.சேயோன் (மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்)

செய்தியாளர் : மணி 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mayiladuthurai is district if not announced before 31 dec will boycott local body election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->