திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய இளம்பெண்.. பைக், செல்போனுடன் எஸ்கேப்..! - Seithipunal
Seithipunal


திருமணம் செய்து கொள்வதாக கூறி இளைஞரிடம் பணம் நகை ஏமாற்றியதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டடது.

மயிலாடுதுறை மாவட்டம், கிளியனூர் பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி (28). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சின்னதம்பிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து வில்லியநல்லூர் மேட்டுத்தெருவில் வசிக்கும் முருகன் என்பவரது மகள் அபிநயா (18) உடன் நிச்சயம் செய்து வைத்துள்ளனர்.

வருங்கால மனைவி தானே என அபிநயாவிற்கு 2 பவுன் தங்க செயின், ரூ.13ஆயிரம் மதிப்புள்ள செல்போன், பெண்ணின் தந்தைக்கு ஸ்பிளண்டர் பிளஸ் பைக் ஆகியவை வாங்கி தந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 15 ம்தேதி சின்னதம்பிக்கு போன் செய்த அபிநயாவின் பெற்றோர் அபிநயாவை காணவில்லை எனவும் தேடிவருவதாகவும் கூறியுள்ளனர். இதனை அடுத்து, அவர் அபிநாயாவை தொடர்பு கொண்ட போது அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள கூறியிருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியந்த ஊர் முக்கியஸ்தர்களிடம் சென்று முறையிட்டுள்ளார். அப்போது அவர்கள் நிச்சயத்திற்கு செலவு செய்த 50 ஆயிரம் பணம் தாங்கள் வாங்கி தந்த செயின், செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை திரும்ப கேட்டுள்ளனர்.

ஆனால், அவற்றை திரும்ப தரததால் சின்னதம்பியின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரை பெற்றுகொண்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mayiladuthurai district marraige cheating girl elopes with boyfriend groom family file complaint


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->